Posts

தமிழவள்

Image
தமிழ் மேல் தாளாத காதல் கொண்ட பலருள் நானும் ஒருத்தியாக இருக்கலாம் என்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.புத்தகங்களை வெறுமனே படிப்பதல்ல அறிவு....அதை அனுபவ ரீதியாக உள்வாங்கி ஆன்மாவில் நிறைத்திட வேண்டும்.  அதற்கானதொரு தளமாக இந்த வலைப்பூ தளத்தை பயன்படுத்தி இருக்கிறேன்.தமிழோடு பயணிப்போம்!!

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

Image
 குழந்தைகள் பெண்கள் ஆண்கள்                           - சுந்தரராமசாமி       சுந்தர ராமசாமி எழுதிய "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்"நாவலானது சிறந்த பின் நவீனத்துவ நாவலாகும்.பின்நவீனத்துவ கொள்கை தமிழில் துளிர்விட காரணமானவர்களுள் முக்கியமானவர் சுந்தர ராமசாமி.பசுவய்யா என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகள். எழுதியுள்ளார் நாவலில் வரும் நிகழ்வுகள் 1937,38,39 ஆகிய வருடங்களில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கப் பட்டுள்ளது.நாவலில் நமக்கு எழும் சந்தேகங்களுக்கும்,கேள்விகளுக்கும் நாவலிலேயே பதிலிருக்கிறது.இது அனுபவத்தால் உணர்ந்த உண்மை.20க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் உலா வருகின்றன.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் ,இருப்பையும் வாசகர் நினைவில் நிறுத்த எழுத்தாளர் பல உத்திகளைக் கையாண்டு உள்ளார் என்பது உத்தமம். இந்த கதைக்கு யார் கதாநாயகன் என்றால்???எஸ்.ஆர்.எஸ் ,பாலு,லச்சம்,ஸ்ரீ தரன் இவர்களுள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.கதாநாயகி யாரென்றால்??? லட்சுமி, ஆனந்தம்,வள்ளி,சுகன்யா...‌இது கூட வாசகரின் எண்ண விருப்பப்படியே. எஸ்.ஆர்.எஸ்...